ஒருங்கிணைந்த சாலை காவல் கண்காணிப்பு

 நெல்லிக்குப்பம் : 

இரண்டு வருடமாக அடிக்கடி உள்ளூர் செய்திகளில் வருவது சாலை பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் என்று.


அது ஒரு பக்கம் இருக்கட்டும்.


குமுளி,நாகர்கோவில்,திருப்பதி,வேலூர், பெங்களூர் பேருந்துகள் கடலூரில் எடுத்தால் அடுத்து பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தான் நிற்கும்.

நெல்லிகுப்பத்தில் நிற்காது.


குறைந்தது இந்த பேருந்துகளாவது 

கடலூர் திருவந்திபுரம் சாலை வழியாக பண்ருட்டி செல்ல உத்தரவு பிறபிக்கலாம்.


இதன் மூலம் ஒரு நாலு பேருந்துகள் இந்த சாலை வழியே செல்வதை தவிர்க்கலாம் .


இது ஒரு பக்கம் இருக்கட்டும்.


காலை மாலை peak hours நேரங்களில் இரண்டு காவலர்களை போக்குவரத்தை சரி செய்ய நியமிக்கலாம் .

அவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்களை மாற்று பாதைகளில் திசை மாற்றிவிடலாம்.


இப்படி எந்த நடவடிக்கையும் இல்லாமல் மக்களை பார்த்து நீங்களே ஏதாவது செய்துகொள்ளுங்கள் எப்படியாவது உருண்டு பிரண்டு புழுதியில் செல்லுங்கள் என்று விட்டுவிடுகிறார்கள்.


பேருந்துகள் நேருக்கு நேர் சிக்கிகொள்கின்றன .

பள்ளி தொடங்கும் நேரங்களில் பிள்ளைகளை வைத்துகொண்டு

மக்கள் வழி தெரியாமல் அவதி படுகிறார்கள் .


மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட கண்காணிப்பாளர் இந்த பதிவை பார்த்தால் நெடும் தூரம் செல்லும் பேருந்துகளை நான் சொன்னது போல வழி மாற்றி விடுங்கள் .


சாலை பணிகள் மெதுவாக நடக்கட்டும் .


++++++++


For better Governance


இதுக்கு தான் Transit Transport police என்கிற ஒன்றை தொடங்குங்கள் என்கிறேன்.


நமக்கு ஏன் வம்பு என அவரவர் இருப்பதால் போக்குவரத்தை சுயமாக மாற்ற ஒரு அதிகார அமைப்பு இருக்க வேண்டும்.

+++++++


இப்ப நான் தனி ஆளாக இந்த யோசனையை போக்குவரத்து கழக மேலாளர் கடலூர்,காவல் கண்காணிப்பாளர்,மாவட்ட ஆட்ரியர், நெல்லிக்குப்பம் நகராட்சி chairman, புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் போன்றோருக்கு மனுவாக கொடுக்கவேண்டும்.


ஆனால் இந்த இந்த ஒரு பதிவு வேலை செய்யும் என கருதுகிறேன்.

Comments

Popular posts from this blog

அரசியலில் மதம்

வயதானவர்கள் ஒட்டும் வண்டி

பிளான் போட்டு கலவரம் செய்கிறார்கள்