Posts

Showing posts from August, 2023

ஒருங்கிணைந்த சாலை காவல் கண்காணிப்பு

 நெல்லிக்குப்பம் :  இரண்டு வருடமாக அடிக்கடி உள்ளூர் செய்திகளில் வருவது சாலை பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் என்று. அது ஒரு பக்கம் இருக்கட்டும். குமுளி,நாகர்கோவில்,திருப்பதி,வேலூர், பெங்களூர் பேருந்துகள் கடலூரில் எடுத்தால் அடுத்து பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தான் நிற்கும். நெல்லிகுப்பத்தில் நிற்காது. குறைந்தது இந்த பேருந்துகளாவது  கடலூர் திருவந்திபுரம் சாலை வழியாக பண்ருட்டி செல்ல உத்தரவு பிறபிக்கலாம். இதன் மூலம் ஒரு நாலு பேருந்துகள் இந்த சாலை வழியே செல்வதை தவிர்க்கலாம் . இது ஒரு பக்கம் இருக்கட்டும். காலை மாலை peak hours நேரங்களில் இரண்டு காவலர்களை போக்குவரத்தை சரி செய்ய நியமிக்கலாம் . அவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்களை மாற்று பாதைகளில் திசை மாற்றிவிடலாம். இப்படி எந்த நடவடிக்கையும் இல்லாமல் மக்களை பார்த்து நீங்களே ஏதாவது செய்துகொள்ளுங்கள் எப்படியாவது உருண்டு பிரண்டு புழுதியில் செல்லுங்கள் என்று விட்டுவிடுகிறார்கள். பேருந்துகள் நேருக்கு நேர் சிக்கிகொள்கின்றன . பள்ளி தொடங்கும் நேரங்களில் பிள்ளைகளை வைத்துகொண்டு மக்கள் வழி தெரியாமல் அவதி படுகிறார்கள் . மாவட்ட ஆட்சியர் அல்லது