Posts

Showing posts from May, 2023

அரசுவை

 அரசியல் : நேற்று தோன்றிய அரசியல் நகைச்சுவை.. காரமான சுவை என்பதால் சொல்ல தாமதமாக்கிக்கொண்டேன் ++++++ நல்லவேளை நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்தார்கள். மாறாக இரண்டு செருப்பை எடுத்து வந்து இது ராஜா செருப்பு என்று அரியணையில் வைத்து இதுதான் நாட்டை ஆளபோகுது  என்று சொல்லாமல் விட்டார்களே அதுவே பெரிய நிம்மதி. Conservative ideology  ++++++ ஆட்சியை செம்மையாக்கி நாட்டை வளமாக்குங்கள்  Don't do political stunts  Photo op  Everytime புராண பொருட்களை, நிகழ்வுகளை மையப்படுத்தி கொண்டு அரசியல் செய்கிறார்கள் .

புதுசு ஒரே நாளில் பழசாகும்

 முன்னாள் முதல்வர் கருணாநிதி தினமும் காலை மாலை என சென்று பார்த்து பார்த்து கட்டிய சட்டமன்ற கட்டிடம்  ஜெயலலிதா அவர்கள் பதவி ஏற்றதும் ஒரே நாளில் மருத்துவமனை ஆனது. இந்த முன்னுதாரணம் போதும் நாட்டுக்கு. எதிர்காலத்தில் ஒரே நாளில் இரண்டு iMax திரையரங்கம் டெல்லியில் உதயமாகும் . இங்க பாருங்க எதுமே நிரந்தரம் கிடையாது. எவன் திறந்தால் நமக்கு என்ன ? இவனுங்க போக மாட்டேன்னு மாப்பிள்ளை சோக்கு காட்டுவானுங்க.. போய் பார்த்தால் தெரியும் MP,MLA பாசில் மொத்த குடும்பமும் அங்க தான் சீட்டு போட்டு சீட்டு கட்டு ஆடிகிட்டு இருக்கும். இவனுங்கள நம்ம முடியாது ! +++++++ ஆயிரம் பேர்  வெட்ட வெளியில் கூடி நல்ல தீர்மானம் நிறைவேற்றினால் கூட அது போதும் நாட்டுக்கு . பத்தாயிரம் கோடியில் அலங்கார கட்டிடம் என்பது அடுத்த கட்டம் தான். முதலில் நல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கற்றுக்கொள்ளுங்கள். +++++++   நாளை MP பாசில் என்னை அனுப்ப முடியுமானால் சொல்லுங்க வர்ட்டா